ஏற்றுமதி உற்பத்தி பொருட்களுக்கு வெளிநாட்டு சந்தைகளை தயார்படுத்தும் வகையில், நுகர்வோரை இணையத்தில் இணைக்கும் புதிய வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தத் தீர்மாளித்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் தொடர்பான நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது இலகுவாக இருக்கும். அத்துடன் சர்வதேச தேயிலை சந்தையைப் போன்று உள்ளூர் மசாலாப் பொருட்களுக்கு இணையவழி மூலம் போட்டிச் சந்தையை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது ” இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தினையடுத்து லொஹான் ரத்வத்த தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தையும் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.