“சனச” திட்டத்தை முன்னிட்டு தேசிய அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 50000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அந்த புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதன் பின்னர் 200,000 குடும்ப அலகுகளின் பொருளாதாரம் வலுவடையும் என்றும் பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.
அம்பலாந்தோட்டை பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதி சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அம்பலாந்தோட்டை பிரதேச செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
விவசாயம், மீன்பிடி, சுயதொழில், தொழில் பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சி, மொழி அறிவு, கைத்தொழில், கால்நடைகள், உற்பத்திகள், நில பயன்பாடு, மனித வள மேம்பாடு, மாற்று எரிசக்தி உள்ளிட்ட பல திட்டங்களுடன் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.