அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் புதிய சட்டமொன்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி , பணியாளர்களுக்கான பணி நேரம் முடிவடைந்த பிறகு அவர்களுக்கு அவர்ளின் உயரதிகாரி வேலை நிமித்தம் தொலைபேசியில் அழைப்பை மேற்கொள்ள முடியாது என்பதோடு அத்தொலைபேசி அழைப்புக்ளை நிராகரிக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த சட்டத்தை மீறும் முதலாளிகளுக்கு எதிராக அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் ஊழியர்களுக்கு வேலை-வாழ்க்கை சமநிலையில் இருக்க உதவும் என்று நம்புவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.