ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகள் ஆரம்பித்துள்ளமை அவர்களது செயற்பாடுகளில் இருந்து தெரிய வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது போராட்டத்திற்கு அடித்தார்கள், கண்ணீர் புகைகுண்டுகளால் தாக்கினார்கள் என தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியினர் நேற்று ஜனாதிபதியின் உரையின்போது எழுந்து சென்றார்கள்.
ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியில் பிளவு ஏற்பட்டமையை தான் நேற்றைய அவர்களின் செயற்பாட்டில் எமக்கு தெரிந்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது.
ஏனெனில், எதிர்க்கட்சியை சேர்ந்த பலர் சபையில் அமர்ந்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளால் மக்களை ஏமாற்ற முடியாது.
அன்று நாட்டை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு நாம் அழைப்பு விடுத்தோம்.
ஆனால், அவர் அதிலிருந்து தப்பித்து ஓடினார். இவருக்கு பிரச்சினைகளுக்கானத் தீர்வுத் திட்டமொன்று கிடையாது” என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் குறிப்பிட்டார்.