வேக வேகமாக சுழன்று கொண்டிருக்கும் இந்த காலத்தில் நின்று நிதானமாக எதையும் பார்த்து , இரசிக்க முடியாமல் ஓடி கொண்டிருக்கின்றோம்.
நூம் ஓடும் வேகத்திற்கு நம்மோடு இணைந்து ஓட கூடியது என்றால் ஒன்று கடிகாரம் , இன்னொன்று வானொலி. ஏன் என்ற சந்தேகம் எழுந்தால் சற்று சிந்தித்து பாருங்கள்……….
ஓடும் வேகத்தில் எம்மை பார்க்க முடியாததை கூட எம் செவிகள் கேட்டு மூளையில் பதிய வைத்து விடும் .. இந்த விடயத்தை யாரோ சொன்னார்களே.. , இந்த பாடலை எங்கோ கேட்டேனே ,.. கடிகாரம் பார்க்க நேரமில்லை என்றாலும் வனொலி நமக்கு இதை ஞாபகப்படுத்தும்..
இன்று உலக வானொலி தினம். நம்மோடு அருகிலேயே இருந்து பேசிக்ககொண்டு , உணர்வுகளை பகிர்ந்து கொண்டு , மனதுக்கு இதமான பாடல்களை தந்து கொண்டும் பல நினைவுகளை மீட்டு , உடனுக்குடன் உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டும் இருக்கும் ஒரு நட்பு ஊடகம் என்றால் அது வானொலி தான்.
1890 ஆம் ஆண்டு மார்க்கோணியால் கண்டுபிடிக்கப்பட்ட வானொலி ஆரம்பத்தில் வணிக நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டாலும் , பின்னர் பொழுதுபோக்கிற்கான இலத்திரனியல் ஊடகமாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
2011 இல், யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகள் பெப்ரவரி 13ஆம் திகதியை உலக வானொலி தினமாக அறிவித்தது. இது 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஒரு சர்வதேச நிகழ்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இன்று கையடக்கதொலைபேசியில் தொலைபேசி நிறுவனங்களினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயலியாக காணப்படுவதோடு , ஒவ்வொரு வானொலி நிறுவனத்துக்கென செயலிகளை கூட கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் அப்பிள் ஸ்டோர்களில் தரவிறக்கம் செய்யும் அளவிற்கு பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.
எது எப்படி இருந்தாலும் , எத்தனை பாடல்களை நினைத்தவுடன் கேட்டாலும் , வானொலியில் ஒரு பாடலை கேட்கும் போது கிடைக்கும் இன்பத்திற்கு இணையா முடியாது .
உலக வானொலி தினத்தில் , ஆதவன் வானொலி , தமிழ் எப்.எம்மோடு இணைந்து ஆதவன் தொலைக்காட்சியும் வாழ்த்துக்களை பகிர்வதில் பெருமிதம் கொள்கிறது.