இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகார சபை சட்ட மூலத்தினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் ‘சாந்த பண்டார’ தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகார சபைச் சட்ட மூலம் பெரும்பான்மை உடன்பாட்டின் அடிப்படையில் பாரிய மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டது. இறுதி சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. ஊடகவியலாளர்களுக்கான பட்டய நிறுவனத்தை உருவாக்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது.
அதன் பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு முறையான பயிற்சியுடன் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழையும் வழங்க எதிர்பார்க்கிறோம்” இவ்வாறு அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.