ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை நான்கு முறை ரி-20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மூன்று போட்டிகளில் இலங்கை அணியும் ஒரு முறை ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றிபெற்றுள்ளன.
ரி-20 கிரிக்கெட்டை பொறுத்தவரை துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஹமனுல்லா குர்பாஸ் மொத்த ஓட்ட எண்ணிக்கையாக மூன்று போட்டிகளில் விளையாடி 152 ஓட்டங்களை குவித்துள்ளார்.
அதேவேளை இலங்கை அணி சார்பில் பானுக ராஜபக்ஷ மூன்று போட்டிகளில் விளையாடி 87 ஓட்டங்களை குவித்துள்ளார்.
பந்துவீச்சை பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் அணியின் முஜிப் உர் ரஹ்மான் மூன்று போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இலங்கை அணி சார்பில், நுவான் துசார ஒரு போட்டியில் விளையாடி 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
இலங்கை அணியில் பெத்தும் நிசங்க, குஷால் மெண்டிஸ், தனஞ்செய டி சில்வா, சதீர சமரவிக்ரம, அசலாங்க,மத்தியூஸ், ஷானக, ஹசரங்க, தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, மதீஷ பதிரன இடம்பெற்றுள்ளனர்.
இதேநேரம் ஆப்கானிஸ்தான் அணியில், குர்பாஸ், இப்ராஹிம், நைப், ஒமர்சாய், நஜிபுல்லா, நபி, ஜனத், கைஸ், நூர், ஃபரூக்கி, நவீன் ஆகியோர் விளையாடவுள்ளனர்.