இலங்கை அணிக்கு எதிரான 3வது T20 போட்டியில் 3 ஓட்டங்களினால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் தொடரை இலங்கை அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.
210 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பவர்பிளே நிறைவில் ஓவர் விக்கெட்டினை இழந்து 64 ஓட்டங்களை பெற்றது இலங்கை அணி சார்பாக 13 பந்துகளில் 16 ஓட்டங்களை எடுத்திருந்த குஷால் மெண்டிஸ், பரீத் அஹ்மடின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடந்துவந்த குஷால் பெரேரா எவ்வித ஓட்டங்களையும் பெறாமல் ஆட்டமிழக்க இலங்கை அணி 6.2 ஓவர்களில் 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இருப்பினும் மறுமுனையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிசங்க அரைசதம் கடந்தார்.
தொடந்து 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பெத்தும் நிசங்க காயம் காரணமாக வெளியேற அணித் தலைவர் வனிந்து ஹசர்ங்க 13 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை தொடந்து 23 ஓட்டங்களோடு சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்க இலங்கை அணி 4 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.
இதனை தொடந்து ஏஞ்சலோ மேத்யூஸ் 4 ஓட்டங்களோடு மொஹமட் நபியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய கமிந்து மெண்டிஸ் 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்பின்னர் 2 ஓவர்களில் 36 ஓட்டங்களை பெறவேண்டி இருந்தது.
இதில் சானக 13 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். எவ்வாறாயினும் 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணியால் 206 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
இலங்கை அணிக்கு 210 ஓட்டங்கள் வெற்றி இலக்கு : இந்த ஆடுகளத்தில் பதிவான அதிகூடிய ஓட்டங்கள் !!!
3வது T20 போட்டியில் அதிரடி காட்டிய ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை அணிக்கு 210 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
தம்புள்ளையில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 3வது T20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அதன்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி பவர்பிளே முடிவில் 72 ஓட்டங்களை குவித்தது. அவ்வணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஹஜ்ரத்துல்லாஹ் சஸாய் 37 ஓட்டங்களையும் ரஹ்மானுல்லா குர்பாஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
தொடந்து சிறப்பிக்க விளையாடிய ஹஜ்ரத்துல்லாஹ் சஸாய் 22 பந்துகளில் 6 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 45 ஓட்டங்களை பெற்றிருந்தபோது அகில தனஞ்சயவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடந்து 8.3 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை மாத்திரமே இழந்து 100 ஓட்டங்களை கடந்தது. தொடந்து சிறப்பாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் அரைசதம் அடிக்க இது சர்வதேச T20 போட்டியில் அவர் பெற்றுக்கொண்ட 7 ஆவது அரைசதமாக பதிவாகியது.
தொடந்து இப்ராஹிம் சத்ரான் 10 ஓட்டங்களை பெற்றிருந்தபோது அகில தனஞ்சயவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்போது அணியின் ஓட்ட எண்னிக்கை 113 ஆக இருந்தது. தொடந்து அஸ்மத்துல்லா உமர்சாய் ஆடுகளம் புகுந்தார்.
இதனை தொடந்து 43 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு 6 ஓட்டத்தோடு 70 ஓட்டங்களை குவித்த நிலையில் வனிந்து ஹசரங்கவின் பந்துவீச்சில் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆட்டமிழக்க ஆப்கான் அணி 3 விக்கெட்களை 141 ஓட்டங்களை குவிந்திருந்தது.
பின்னர் அஸ்மத்துல்லா உமர்சாய் 31 ஓட்டங்களோடு மதீஷ பதிரனவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடந்து வந்த கரீம் ஜனத் அடுத்த பந்திலேயே எவ்வித ஓட்டங்களையும் பெறாமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓய்வார்கள் நிறைவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்களை மாத்திரமா இழந்து 209 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனை அடுத்து 210 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இலங்கை அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது ஆப்கான் அணி !
தம்புள்ளையில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 3வது T20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
தம்புள்ளயில் நடைபெறும் இறுதி ஆட்டம் : வெல்லப்போவது யார் ? ஒரு அலசல்
தம்புள்ளயில் நடைபெறும் இறுதி T20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வைட் வோஷ் செய்யும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியை இரண்டு போட்டிகளில் வீழ்த்தி இலங்கை அணி ஒரு போட்டி மீதமிருக்க 2-0 என்ற கணக்கில் T20 தொடரை கைப்பற்றியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இலங்கை அணி மிகவும் வலுவாக உள்ளது, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் ஆப்கானிஸ்தானை க்ளீன் ஸ்வீப் செய்துள்ளது.
துடுப்பாட்டத்தில் ஆரமப துடுப்பாட்ட வீரர்கள் முதல் கடைசி வீரர்கள் வரை பிரகாசிக்க பந்துவீச்சிலும் இலங்கை அணி மிகவும் வலுவாக உள்ளது.
எவ்வாறாயினும் இரண்டாவது டி20 போட்டியில் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டியில் ஆறுதல் வெற்றியை பெற்றுக்கொள்ளும் முனைப்போடு களமிறங்கவுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சாளர்கள் பவர்பிளேயில் சிறப்பாக செயல்படவில்லை. கடந்த ஆட்டத்தில் நபி மற்றும் ஒமர்சாய் மட்டுமே விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
மறுபுறம், துப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வலுவாக இருந்தாலும் இலங்கை அணிக்கு எதிரான இந்தத் தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை.
ரங்கிரி தம்புள்ளை மைதானத்தை பொறுத்தவரை இன்றைய ஆடுகளம் ஆரம்ப ஓவர்களில் துடுப்பாட்ட வீரர்களுக்கும் பின்னர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கம் சாதகமாக இருக்கும்.
முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சராசரியாக 160 ஓட்டங்களும் 2வது இன்னிங்ஸ் சராசரி யாக 152 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் நாணய சுழற்சியில் வென்ற அணி முதலில் துடுப்பெடுத்தாடலாம்.