வடமேற்கு, வடமத்திய மாகாணங்களிலும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்ப மட்டத்திற்கு மேல் வெப்பச் சுட்டெண் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல மாவட்டங்களில் வெப்பநிலை 32 டிகிரியைத் தாண்டும் என்றும் அநுராதபுரம், திருகோணமலையில் 33 டிகிரிவரை வெப்பநிலை உயரலாம் என்றும் அறிவிக்கப்பட்டள்ளது.
கண்டி, கொழும்பு, காலி மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் 32 டிகிரி வெப்பநிலை பதிவாகும் என்றும் கடந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரியிலேயே அதிக வெப்பநிலை அதாவது 37.4° பதிவாகியுள்ளது.
ஆகவே இந்த காலகட்டத்தில் வேலை செய்பவர்கள் குறைந்தது 2 லீட்டருக்கு மேல் நீரை அருந்த வேண்டும் என்றும் முடிந்தவரை நிழலில் ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் குழந்தைகளை அதிகம் கவனிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேநேரம் வேளையில் செல்வதை குறைக்குமாறும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.