மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காமல் இருப்பது நல்லது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மாவனெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்வடவாறு குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான நாடமாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.