சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண புதிய சிறைச்சாலைகளை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சில சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகள் காரணமாகவே தற்போது சிறைச்சாலையில் கைதிகளின் எண்னிக்கை அதிகரிப்பதற்கு பிரதான காரணம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேவைக்கு ஏற்ப புதிய சிறைகள் விரைவில் நிறுவப்படும் என்றும் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதைக் காரணம் காட்டி சட்ட நடவடிக்கைகளை தாமதப்படுத்த முடியாது என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்ப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் புதிய கட்டிடங்களின் நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்தும் அதேவேளையில், குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வாக, கைதிகளை திறந்தவெளி சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.