புதிய பொலிஸ் மா அதிபரின் நியமன விடயத்தில் மீண்டும் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டின் 36 ஆவது காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோன் ஜனாதிபதியினால் நேற்று நியமிக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ”அரசியலமைப்பு பேரவை பொலிஸ் மா அதிபர் நியமனத்தை அங்கீகரிக்கவில்லை என்றும் ஆதரவாக 4 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் மற்றும் 2 பேர் வாக்களிப்பதை தவிர்த்தும் இருந்தனர் எனவும், முடிவெடுக்க குறைந்தபட்சம் 5 வாக்குகள் தேவை எனவும் இதன்மூலம் இரண்டாவது முறையாகவும் அரசியலமைப்பு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது” என்றும் குற்றம் சாட்டினார்.