பதில் பொலிஸ்மா அதிபராக பணியாற்றிவந்த தேஷபந்து தென்னக்கோனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
நாட்டின் 36ஆவது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தேஷபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கத்தோலிக்க திருப்சபை, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட 7 தரப்பினர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
தாக்கல் செய்யப்பட்ட ஏழு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பது தொடர்பான அரசியலமைப்பு பேரவைக்கு இன்னும் அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.