புதிய பொலிஸ்மா அதிபராக பதவியேற்றுள்ள தேசபந்து தென்னகோன் இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நாட்டின் 36 ஆவது பொலிஸ்மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையிலேயே பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று ஜனாதிபதியைச் சந்தித்து காலந்துரையாடியிருந்தார்.
இதன்போது புதிய பொலிஸ்மா அதிபருக்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதுடன், சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்றையும் கையளித்திருந்தார்.
இதனையடுத்து பிரதமரின் அலுவலகத்திற்கு சென்றிருந்த தேசபந்து தென்னகோன், தினேஸ் குணவர்த்தனவுடன் கலந்துரையாடியிருந்தார்.
இந்த நியமனம் தொடர்பாக பல தரப்பினர் குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர்.
எனினும் அரசாங்கம் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளதுடன் இந்த நியமனம் அரசியலமைப்பிற்கு உட்பட்டே வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.