பிரான்ஸில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடாக பிரானஸ் மாறியுள்ளது.
நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டு அமர்வில் 780 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 72 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருந்தமையைத் தொடர்ந்து குறித்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.