நாட்டில் நிலவி வரும் நிதி நெருக்கடி காரணமாக தனது சம்பளத்தை விட்டுக் கொடுப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளார்.
இதேவேளை பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பின் அமைச்சரவை சகாக்களும் தமது மாதச் சம்பளம் மற்றும் சலுகைகளை விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற செலவினங்களைக் குறைப்பது தொடர்பான இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இம் முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் அரசு சார்பிலான வெளிநாட்டுப் பயணங்களை முன் அனுமதி இல்லாமல் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.