முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ “ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை வெளியேற்றியதன் சதி” என்ற தனது நூலை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களிடம் வழங்கியுள்ளார்.
ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் மல்வத்து விகாரைக்கு நேற்று (22) வழிபாட்டுக்காக சென்ற முன்னாள் ஜனாதிபதி தனது புத்தகத்தின் பிரதிகளை இவ்வாறு வழங்கியுள்ளார்.
அதன்படி, ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளை நிறைவேற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, தலதா மாளிகையின் தியவடன நிலமேவிடம் நூலின் பிரதியொன்றினை வழங்கியிருந்தார்.
இதனையடுத்து, அதேதினம் மல்வத்து விகாரைக்கு சென்று மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரின் ஆசீர்வாதத்தைப் பெற்றார்.
பின்னர், அஸ்கிரிய மகா விகாரைக்குச் சென்று நூலை வழங்கி மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதனவின் ஆசீர்வாதங்களைப் பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ, மகாநாயக்க தேரர்களுடன் தனிப்பட்ட கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.