ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இசை நிகழ்ச்சியொன்றில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது.
மொஸ்கோவின் கிராக்கஸ் சிட்டி ஹால் அரங்கில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி அரங்கத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது, துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று(22) நடைபெற்ற குறித்த பயங்கர தாக்குதலுக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இப் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 143ஆக உயர்ந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
மேலும், இந்த தாக்குதலில் நேரடியாகத் தொடர்புடைய 11 உட்பட4 துப்பாக்கிதாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.