வடமேற்கு நைஜீரியாவில் கடத்தப்பட்ட சுமார் 300 பாடசாலை மாணவர்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர் .
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மேலும் 300 பாடசாலை மாணவா்கள் கடந்த மார்ச் 07ஆம் திகதி பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனா்.
அந்நாட்டின் வடக்குப் பகுதியைச் சோ்ந்த கடுனா மாகாணத்தின் பள்ளியொன்றுக்கு மோட்டாா்சைக்களில் வந்த பயங்கரவாதிகள், அங்கிருந்து மாணவா்களைக் கடத்திச் சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அதனை தொடர்ந்து குறித்த மாணவர்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதாக கடுனா மாகாண ஆளுநர் உப ஷனி இன்று தெரிவித்தார்.
இருப்பினும் விடுவிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.