பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் மூலமே நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது.
‘அரசாங்கம் மேற்கொண்டு வரும் புதிய பொருளாதார மறுசீரமைப்பு செயற்பாட்டின் பலன் இன்னும் சில வருடங்களில் மக்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே சிறந்த எதிர்காலத்தை உருவாக்க எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை இளைஞர்கள் தீர்மானிக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ள நிலையில் கடன் வழங்கிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல்களின் பின்னர் நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு அந்த நாடுகள் மீண்டும் துணை நிற்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தில் இருந்து ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு நாம் செல்ல வேண்டும்.