“புதிதாக இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விசேட பண்டவரி குறைக்கப்பட மாட்டாது” என நிதிராஜங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் பெரிய வெங்காயத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.இந்தியா வெங்காய ஏற்றுமதியை இடைநிறுத்தியமை இதற்கு காரணமாகும். இளஞ்சிவப்பு பெரிய வெங்காயம் தரமானது 80 ரூபாயிலிருந்து 10 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வெங்காய விலைஅதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஜனவரி மாதத்தில் கீரி சம்பா விலை வெகுவாக அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் ஜீ ஆர் 11 ரக அரிசியை இறக்குமித செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கேற்ப முதற்கட்ட அரிசி கொண்டுவரப்பட்டதுடன் அவை துறைகத்தில் இருந்து விடுவிக்கப்படவில்லை அவை தேங்கியுள்ளன எனவே துறைமுகத்தில் தேங்கியுள்ள பொருட்களுக்கு மாத்திரமே விசேட பண்டவரி குறைக்கப்பட்டுள்ளது.புதிதாக அரிசி இறக்குமதிக்க இந்த நடைமுறை பொருந்தாது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.