”இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதால் இரண்டாம் காலாண்டில் கடன் மறுசீரமைப்பு சிக்கலை சாதகமாகத் தீர்க்க முடியும்” என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தென் சீனாவில் இடம்பெற்ற போவா மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இலங்கை எதிர்நோக்கும் கடன் மறுசீரமைப்புச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் , இதன் காரணமாக இலங்கை எதிர்நோக்கும் சவால்களை தீர்க்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், லண்டனில் தற்போது இடம்பெற்று வரும் முறியாளர்களுடனான கலந்துரையாடல்களில் சாதகமான பெறுபேறுகளை எதிர்பார்ப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.