”பொருளாதாரத்தை அபிவிருந்தி செய்வதற்கு நாட்டிற்கு மேலும் பல முதலீடுகள் தேவைப்படுவதாக” அமைச்சர் மனுஷநாணயக்கார தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் வரிசையுகத்தை நிறைவுக்கு கொண்டுவந்தவர் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க. வீழ்ச்சியடைந்து காணப்பட்ட பொருளாதாரம் இன்று வலுவடைந்து வருகின்றது.
பொருளாதாரத்தை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்லக்கூடிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டிற்கு முதலீடுகள் தேவைப்படுகின்றன.இந்த நாட்டிற்கு திறந்த பொருளாதாரத்தைஅறிமுகப்படுத்தியவர் ஜே .ஆர். ஜயவர்தன. இன்று அவரது வழிகாட்டலில் ஜனாதிபதி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். இன்று நாட்டின் பல துறைகள் அபிவிருத்திஅடைந்துவருகின்றன” இவ்வாறு மனுஷநாணயக்கார தெரிவித்துள்ளார்