கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துஷ்மந்த மித்ரபால மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை, குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை நேற்று ஆரம்பித்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த முறைப்பாடு தொடர்பில் நடத்தப்படும் விசாரணையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையக ஊழியர்கள் உட்பட பலரிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிக்க முடியாதவாறு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.