சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி வழங்வோம் என ஈரான் எச்சரித்துள்ளது.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் இராணுவத்தின் மூத்த தளபதிகள் இருவர் உட்பட16 பேர் உயிரிழந்தனர்.
இத் தாக்குதலக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்திருந்தது.
எனினும் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு நிச்சயம் பழி தீர்ப்போம் என ஈரான் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க அல்லது இஸ்ரேல் நாட்டு தூதரகங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் மீது அடுத்த வாரத்துக்குள் ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.