பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் படத்துடன் புதிதாக அச்சிடப்பட்ட பிரித்தானிய பணமான பவுண்டு தாள்கள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என பிரித்தானிய வங்கி அறிவித்தது.
பிரித்தானிய ராணி எலிசபெத் மறைந்த பின்னர் பிரித்தானியாவின் மன்னராக மூன்றாம் சார்ல்ஸ் பொறுப்பேற்றார்.
இதனையடுத்து, மன்னர் மூன்றாம் சார்லஸின் படத்துடன் பிரித்தானிய பணமான பவுண்டு வெளியாகும் என பிரித்தானிய வங்கி அறிவித்தது.
அதன்படி, பிரித்தானிய நாட்டு பணத்தின் தாள்களான 5,10,20 மற்றும் 50 பவுண்டுகளில் மன்னரின் படம் அச்சிடப்பட்டுள்ளது.
மன்னர் மூன்றாம் சார்லஸ் படத்துடன் அச்சிடப்பட்ட குறித்த பவுண்டு தாள்களை, பெக்கிங்காம் அரண்மனைக்குச் கொண்டுச் சென்ற இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி மன்னர் சார்ல்சிடம் காட்டி ஒப்புதல் பெற்றுள்ளார்.
இந்த புதிய பவுண்டு தாள்கள், எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தற்போது நடைமுறையில் உள்ள, மறைந்த ராணி எலிசபெத் படத்துடன் பண தாள்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.