அயோத்தி ஸ்ரீ ராம நவமி தினமான நேற்று, அயோத்தி ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது, சூரியனின் ஒளிக்கற்றைகள் நேரடியாக பட்டுள்ளது.
சூரியனின் ஒளிக்கற்றைகள், ஸ்ரீராமர் நெற்றியில் திலகம் இட்டது காட்சியை கண்ட பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர்.
அயோத்தியில் ஸ்ரீ ராம நவமி விழா நேற்று (17) கோலாகலமாக ஆரம்பமானது.
இதன்போது, அதிகாலை 3:30 மணிக்கு பிரம்ம முஹூர்த்தத்தின் போது, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ராமரை தரிசனம் செய்து வந்தனர்.
ஸ்ரீ ராம நவமி விழா முன்னிட்டு ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை தரிசனம் மற்றும் ஆரத்தி போன்றவற்றுக்கான அனைத்து சிறப்பு பாஸ் முன்பதிவுகளும் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, அனைவரும் ஒரே பாதையில் செல்ல வேண்டும்.
மேலும், மங்கள ஆரத்தியில் ஆரேம்பமாகி, இரவு 11 மணி வரை தரிசனத்தின் காலம் 19 மணி நேரமாக நீடிக்கப்பட்டுள்ளது.
பிரசாதத்தின் போது ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே திரை மூடப்படும்.
சிறப்பு விருந்தினர்கள் ஏப்ரல் 19 ஆம் திகதிக்குப் பிறகு மட்டுமே தரிசனத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஸ்ரீ ராம் ஜன்மோத்சவ் கொண்டாட்டம் அயோத்தி நகரம் முழுவதும் சுமார் நூறு பெரிய LED திரைகளில் ஒளிபரப்பப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.