இந்தியாவில் இன்று முதல் ஜூன் 1ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் 7 கட்ட தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது.
தமிழ்நாடு, அருணாசல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், மராட்டியம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அந்தமான்-நிகோபார், காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி என 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
மேலும் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையவுள்ளதுடன், அருணாசலபிரதேசம் போன்ற சில மாநிலங்களில் 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையவுள்ளது.
தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.