நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும்,அதிக வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும்,
இன்று மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று (20) அவதானிக்கப்பட வேண்டிய மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம், வவுனியா, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின்,
சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.