மக்கள்தொகை குறைவால் ஜப்பானில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானின் தற்போதைய 124.35 மில்லியன் மக்கள்தொகை 13 ஆண்டுகளாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
நாட்டின் தொழிலாளர் எண்ணிக்கை 2022 முதல் 2040 வரை தொடர்ந்து 12 வீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அந்த நேரத்தில் நாட்டில் 11 மில்லியன் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார , உலகிலேயே அதிக வயதான மக்கள்தொகை கொண்ட மற்றும் உலகிலேயே மிகக் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட நாடு ஜப்பான் ஆகும்
இந்நிலையில் , கடந்த வருடம் 758,631 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.