இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த முதலாவது இலங்கை பெண் என்ற பெருமையை, தமிழ் நாடு திருச்சி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினி பெற்றுள்ளார்.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நளினி என்ற பெண்ணுக்கு முதன்முறையாக வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளதைத்தொடர்ந்து, அன்னை ஆசிரமம் எம்எம் நடுநிலைப்பள்ளியில் அவர் தனது முதல் வாக்கினைச் செலுத்தியுள்ளார்.
திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் மன உளைச்சலில் உள்ளதாகவும் அங்கிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது கூட தொரியாமல் சுமார் 75 இலங்கை தமிழர்கள் இன்னும் உள்ளதாக நளினி குறிப்பிடுகின்றார்.
தங்களை இலங்கைத் தமிழர் என்று தெரிவிப்பதை விடுத்து, இந்திய வம்சாவளியினர் என்று அதிகாரிகள் அடையாளப்படுத்த வேண்டும் என்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.