யாழ்ப்பாணம், மடகல், சகாயபுரம் பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கிணற்றில் விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முற்பட்ட போது வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் நீண்டகாலமாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக குடும்ப உறவினர்கள் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது இயற்கை மரணமா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய 37 வயதுடைய பிரதீபன் நித்யா இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.