”ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து தப்பிக்கவே விஜயதாச ராஜபக்ஷ பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும், அவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு, உறுப்பினரோ அல்லது வேறு எந்த முக்கிய கட்சியிலும் பங்குபற்றவில்லை எனவும் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் ”மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக 400 முதல் 500 வரையான வழக்குகள் இருப்பதாகவும், அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விற்றுவிட்டாரோ என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளதாகவும் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.