இந்திய பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானில் உரையாற்றிய விடயம் தொடர்பாக அளிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி அளித்த முறைப்பாட்டில் பிரதமரின் பேச்சு பிரிவினையை தூண்டுவதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே குறிவைப்பதாக இருப்பதாகக் கூறியிருந்தது.
இந்நிலையிலேயே பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசியமை தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
இந்தச் சூழலில் அதிகரிக்கும் அழுத்தங்களுக்கு இடையே தேர்தல் ஆணையம் புகார்களை ஆய்வு செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.