நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறையை அறிவித்து இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து மற்றும் காகிதாதிகள் உள்ளிட்டவற்றை வழங்காமைக்கான உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரியே அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் மே 6ஆம் திகதி முதல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சகல சேவைகளில் இருந்தும் விலகிக் கொள்வுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் அனுராத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 14,000 இற்கும் அதிகமான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இவ்வாறு பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.