டெல்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் (என்சிஆர்) அமைந்துள்ள 60 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டல், மின்னஞ்சல் மூலம் இன்று (01) காலை காலை வந்துள்ளதாக தீயணைப்புத் துறை இயக்குநர் அதுல் கார்க் உறுதி செய்துள்ளார்.
இதனையடுத்து, அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், வெடிகுண்டு நிபுணர்களுடன் பொலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனை நடவடிக்கைகளையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த டெல்லி பொலிஸ் துணை கண்காணிப்பாளர், அனைத்து பாடசாலைகளையும் சோதனை செய்துள்ளதாகவும், வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் இதுகுறித்து பதற்றமடைய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மிரட்டல் வந்த ஒரு பாடசாலையை சோதனை செய்த டெல்லி துணைநிலை ஆளுநர், வி.கே.சக்சேனா, இது குறித்தான விரிவான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.