பிரேஸிலில் கடந்த 4 மாதங்களில் மாத்திரம் 40 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10 இலட்சம் பேருக்கு டெங்கு நோய் பரவிய நிலையில் தற்போது 4 மடங்காக டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பிரேஸில் அரசாங்கம் பொதுமக்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.