பிரேசிலில் பெய்து வரும் வரலாறு காணாத மழையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ரியோ கிராண்டே டூ சுலில் (Rio Grande do Sul) 67 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தத்திர் 69 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மழையினால் வீடுகளை இழந்துள்ள பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரேசிலின் தெற்கு நகரமான ரியோ கிராண்ட் டூ சூல் பகுதியில் தொடர் மழை பெய்தது.
உருகுவே, அர்ஜென்டினாவின் எல்லை நகரங்களும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் 80 ஆண்டுகால வரலாற்றில் இல்லாதளவில் புயலுடன் மழை பெய்து வருவதால் பாதிப்பின் தாக்கம் அதிரித்துள்ளது.
போர்ட்டோ அழகர் பகுதியில் குளம் உடைந்ததில் வீதிகள் முழுவதும் வெள்ளநீரால் மூழ்கியுள்ளது.
இங்குள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், மீட்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதம்தக்கது.