பிரேசிலை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 74 பேர் காணாமல் போயுள்ளனர்.
80 வருடங்களுக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ள நிலைமை இதுவாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மோசமான வானிலை காரணமாக சுமார் 25,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
காணாமல் போனவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பல கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.