மராட்டிய மாநிலத்தில் கட்சிரோலி என்ற பகுதிளில் பர்சேவாடா எனும் குக்கிராமத்தில் பழங்குடியின பெண்கள் 2 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.
ஜம்னி தெலமி (வயது 52), தேவு அட்லமி (57) ஆகிய 2 பேரும் மாந்தீரிகம் செய்வதாக அந்த கிராம பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டதையடுத்து 2 பெண்களும் 3 மணி நேரம் சித்ரவதை செய்யப்பட்டு 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு காட்டுக்குள் இழுத்து செல்லப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் உயிரோடு எரிக்கப்பட்ட பெண்ணான ஜம்னி தெலமி கணவர் திவாகர் மகன் தேவாஜி ஆகியோரும் உள்ளடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.