ஜனாதிபதி தேர்தலில் தலையிடுவதற்கோ, தேர்தலை காலம் தாழ்த்துவதற்கோ ஜனாதிபதிக்கும், பாராளுமன்றத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று (16) இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர்,
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் திகதி அரசியலமைப்பின் பிரகாரம் வெளியிடப்படும்.
தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் நவம்பம் மாதம் 18 ஆம் திகதியுடன் நிறைவடையும்.
அதன்படி நவம்பர் 18 ஆம் திகதியிலிருந்து ஒரு மாத்திற்கு முன்னர், அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும்.
ஜனாதிபதி தேர்தல் குறித்தான அனைத்து நடவடிக்கைளுக்கான அனைத்து அதிகாரங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆகையால் எக் காரணத்தை கொண்டும் ஜனாதிபதி தேர்தலில் தலையிடுவதற்கோ, தேர்தலை காலம் தாழ்த்துவதற்கோ ஜனாதிபதிக்கும், பாராளுமன்றத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.