ஒகஸ்ட் முதல் வாரத்தில் நிச்சயமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் எனவும், ஒகஸ்ட் இரண்டாவது வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய பாராளுமன்றம், புதிய பிரதமர், புதிய அமைச்சரவையை தற்போதைய ஜனாதிபதியே நியமிப்பார் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று(19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர், ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தேர்தலில் போட்டியிடமாட்டார் என்பது ஜனாதிபதிக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும் என குறிப்பிட்டார்.
அதன்படி, ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு வேறொரு கட்சி வெற்றிபெருமாக இருந்தால், குறித்த கட்சி பாராளுமன்றத்தை நிச்சயமாக கலைக்கும் எனவும், அவ்வாறு கலைத்தாலும் கூட எதிர்பார்க்கப்படும் மாற்றம் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே இருக்கும் எனவும் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
மேலும், இன்று அநேகமான அமைச்சர்கள் தாம் தோற்றுபோய்விடுவோம் என்ற அச்சத்தில் தேர்தலை சந்திக்கும் பயத்திலேயே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜீன் மாதம் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என தகவல் கிடைத்துள்ளதாகவும், ஒருவேளை பாராளுமன்ற நடவடிக்கைகள் மூலம் முன்னறே முடியுமாயின், குறித்த திகதிக்கு முன்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஒகஸ்ட் 1 முதல் வாரத்தில் தேர்தலை நடத்துவதற்கான சட்ட ரீதியான அனுமதி கிடைக்கும் என தெரிவித்த உதயங்க வீரதுங்க, 2020 ஆம் ஒகஸ்ட் மாதம் நடத்தப்பட்டதைப்போன்று இவ்வாண்டும் அதேபோன்றதொரு திகதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார்.
அத்துடன், பொஜனபெரமுனின் ஜனாதிபதி வேட்பாராளர் ரணில் விக்கிமசிங்க இல்லையென்பது உறுதி எனவும், தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சரியான நேரத்தில் நாட்டுக்கு அறிவிப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலே முதலாவது நடைபெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
மேலும், ஒகஸ்ட் முதல் வாரத்தில் நிச்சயமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும். ஒகஸ்ட் இரண்டாவது வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய பாராளுமன்றம், புதிய பிரதமர், புதிய அமைச்சரவையை தற்போதிருக்கும் ஜனாதிபதியே நியமிப்பார்.
அதேபோன்று ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் மாதம் நடைபெறும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.