கோபென்ஹாகென் (Copenhagen) சென்றிருந்த டென்மார்க் பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் (Mette Frederiksen) மர்ம நபரொருவரால் தாக்குதலுக்குள்ளாகியுள்ள சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்குள்ளான டென்மார் பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் (Mette Frederiksen) உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
இதில், பிரதமரின் கழுத்து பகுதியில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பிரதமரை தாக்கியதாகக் கூறப்படும் 39 வயதுடைய மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்போது, தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன், நடந்த சம்பவத்தால் தான் அதிர்ச்சியும், கவலையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், தான் தற்போது நலமாக இருப்பதாகவும், தனக்காக குரல் கொடுத்தவர்களுக்கும், ஊக்கமளித்தவர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு டென்மார்க் இன் இளம் வயது பிரதமராக மேட் ஃப்ரெடெரிக்சன் பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.