இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கும் இடையில் கடந்த 7 மாதங்களாக போர் இடம்பெற்ற வருகின்ற நிலையில், இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட போர் நிறுத்தத்தின் போது 100க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர்.
எனினும் அவர்களிடம் இன்னும் 120 பிணைக்கைதிகள் இருப்பதாகவும் அவர்களை மீட்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஹமாஸ் அமைப்பினரால் கடத்தி செல்லப்பட்ட பிணைக்கைதிகளில் பெண் ஒருவர் உள்ளிட்ட 4 பேரை இஸ்ரேல் இராணுவம் நேற்று மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகஙகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, காசா முனையிலுள்ள நுசைரத் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிணைக் கைதிகளையே இஸ்ரேல் சிறப்புப்படையினர் இவ்வாறு மீட்டுள்ளனர்.
இதேவேளை, பிணையக் கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 210 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய காசாவிலுள்ள நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 210 பேர் உயிரிழந்துள்ளதுடன், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.