சவூதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, ஹஜ் பயணம் மேற்கொண்டிருந்த ஹஜ் யாத்தீரிகர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இவ்வாண்டு ஹஜ் பயணத்தின்போது சுமாா் 10 நாடுகளைச் சோ்ந்த 1,081 போ் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இஸ்லாமிய மக்கள் தங்கள் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக, ஒவ்வொரு ஆண்டும், சவூதி அரேபியாவிலுள்ள மக்கா புனித தளத்துக்கு செல்வது வழக்கமாகும்.
அதன்படி, இவ்வருடத்துக்கான ஹஜ் புனித யாத்திரை கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமானது.
அன்றிலிருந்து இதுவரை 20 இலட்த்துக்கும் மேற்பட்மோர் புனித யாத்திரைக்காக மக்கா நகரில் திரண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில், சவூதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்பநிலைக்காரணமாக 1000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
மேலும், மக்கா நகரில் இவ்வாரம் 51.8 டிக்ரி (125 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை வெப்பம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.