இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக ஓஸ்திரியாவுக்கு சென்றிருந்த நிலையில் இன்று காலை டெல்லிக்கு திரும்பியுள்ளார்.
ஒஸ்ட்ரியாவுக்கு (AUSTRIA) விஜயம் செய்திருந்த போது , அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதனை தொடர்ந்து ஓஸ்திரியாவில் உள்ள இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றியிருந்தார்.
அப்போது, “பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் நமது திறமை, அறிவை பகிர்ந்து வருகிறோம். நாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை. இந்தியா எப்போது அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது. இதனால் 21ம் நூற்றாண்டில் இந்தியா வலிமைபெற்று வருகிறது” என்று மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.