உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, தற்கொலை செய்து கொள்ளும் பட்டியலில் இலங்கை இன்னும் முன்னணியில் இருப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்
கொழும்பு விடுதி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதன்படி 1996-1997 ஆம் ஆண்டுகளில் உலகில் அதிகளவான தற்கொலைகள் இடம்பெற்ற நாடாக இலங்கை இருந்ததாகவும், தற்போது நிலைமை மேம்பட்டுள்ள போதிலும், நாடு இன்னமும் திருப்திகரமான நிலையில் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
குறிப்பாக தற்கொலையை துண்டும் காரணிகள் பல இருப்பதாகவும், அந்த சூழ்நிலைகளை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் ஏனைய துறைகளின் ஒத்துழைப்புடன் இந்த நிலைமையை மேம்படுத்த சுகாதார அமைச்சு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.