வெனிசுலாவின் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி நிக்கலஸ் மடூரோ வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டு தேர்தல்கள் சபை பகுதியளவிலான முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில் அதற்கமைய ஜனாதிபதி மடூரோ வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
80 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் 51.02 வீத வாக்குகளை மடூரோ பெற்றுள்ளதுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான வேட்பாளர் 44.02 வீத வாக்குகளை பெற்றுள்ளதாக தேர்தல்கள் சபை அறிவித்துள்ளது.
எனினும் வாக்குகளை எண்ணுவதில் மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளதாகவும் தேர்தல்கள் சபையின் தலைவர் எல்விஸ் அமரோசோ ஜனாதிபதி மடூரோவின் நெருங்கிய நண்பர் எனவும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 11 வருடங்களாக ஆட்சியிலுள்ள நிக்கலஸ் மடூரோவின் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு பாரிய முயற்சி மேற்கொள்ளப்படுகவதாகவும் தேர்தல் ஊடாக தான் மீண்டும் தெரிவாகியுள்ளமை அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் முழக்கம் என ஜனாதிபதி மடூரோ குறிப்பிட்டுள்ளார்.