அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையே பனிப்போர் தொடரும் நிலையில், முதன்முறையாக இரண்டு நாடுகளுக்கும் இடையே கைதிகள் பறிமாற்ற நிகழ்வு இடம்பெற்றது.
அந்தவகையில், முதற்கட்டமாக 26 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளில் உளவு, பயங்கரவாதம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ரஷ்யா, பெலாரசை சேர்ந்த சிலரை அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
அதேபோல், ரஷ்யா, பெலாரசில் உளவு, பயங்கரவாதம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா, ஜெர்மனி, போலாந்து, ஸ்லோவேனியா, நோர்வே போன்ற நாடுகளை சேர்ந்தவர்களை ரஷ்யா, பெலாரஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இதில் குறிப்பாக, அமெரிக்காவின் பிரபல நாளிதழான தி வால் ஸ்டிரீட் (Wall Street Journal) ஜெர்னலின் செய்தியாளர் இவென் ஜெர்ஷ்வொவிச் (Evan Gershkovich) மற்றும் அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய பால் வீலன் (Paul Whelan) போன்றோர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இவர்கள் உள்ளிட்ட 26 கைதிகள் அமெரிக்கா – ரஷ்யாவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், ரஷ்யா, பெலாரஸ் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்கா, ஜெர்மனி உள்பட மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 16 பேரும், அமெரிக்கா, ஜெர்மனி சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்யா, பெலாரசை சேர்ந்த 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பனிப்போர் காலத்திற்கு பின்னர் அமெரிக்கா – ரஷ்யா இடையே கைதிகள் பரிமாற்றம் நிகழ்வு இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கைதிகள் பரிமாற்றம் துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகள் துருக்கியில் இருந்து ரஷ்யாவுக்கு சென்றடைந்துள்ள நிலையில், அவர்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் விமான நிலையத்திலிருந்து வரவேற்றார்.
அதேபோல், ரஷ்யாவில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகள் துருக்கியில் இருந்து அமெரிக்கா, ஜெர்மனி சென்றடைந்தனர்.
விடுதலை செய்யப்பட்ட அமெரிக்கர்களுடன் விமானம் மேரிலாண்டில் உள்ள கூட்டு தளத்தில் இறங்கியபோது அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி கோசம் எழுப்பியிருந்தனர்.
நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஆகியோர் குறித்த மூன்று அமெரிக்கர்களையும் வரவேற்றனர்.
மேலும், விடுதலை செய்யப்பட்ட மூவருடன் புகைப்படங்களை எடுத்த பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேறியுள்ளனர்.
அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையே பனிப்போர் தொடரும் நிலையில், முதன்முறையாக இரண்டு நாடுகளுக்கும் இடையே கைதிகள் பறிமாற்ற நிகழ்வு இடம்பெற்றது.
அந்தவகையில், முதற்கட்டமாக 26 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல்
போக்கு நிலவி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளில் உளவு, பயங்கரவாதம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ரஷ்யா, பெலாரசை சேர்ந்த சிலரை அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
அதேபோல், ரஷ்யா, பெலாரசில் உளவு, பயங்கரவாதம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா, ஜெர்மனி, போலாந்து, ஸ்லோவேனியா, நோர்வே போன்ற நாடுகளை சேர்ந்தவர்களை ரஷ்யா, பெலாரஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இதில் குறிப்பாக, அமெரிக்காவின் பிரபல நாளிதழான தி வால் ஸ்டிரீட் (Wall Street Journal) ஜெர்னலின் செய்தியாளர் இவென் ஜெர்ஷ்வொவிச் (Evan Gershkovich) மற்றும் அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய பால் வீலன் (Paul Whelan) போன்றோர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இவர்கள் உள்ளிட்ட 26 கைதிகள் அமெரிக்கா – ரஷ்யாவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், ரஷ்யா, பெலாரஸ் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்கா, ஜெர்மனி உள்பட மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 16 பேரும், அமெரிக்கா, ஜெர்மனி சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்யா, பெலாரசை சேர்ந்த 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பனிப்போர் காலத்திற்கு பின்னர் அமெரிக்கா – ரஷ்யா இடையே கைதிகள் பரிமாற்றம் நிகழ்வு இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கைதிகள் பரிமாற்றம் துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகள் துருக்கியில் இருந்து ரஷ்யாவுக்கு சென்றடைந்துள்ள நிலையில், அவர்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் விமான நிலையத்திலிருந்து வரவேற்றார்.