‘பரிஸ் 2024’ ஒலிம்பிக் போட்டியில் இலங்கையின் முக்கிய நம்பிக்கைகளில் ஒருவரான தருஷி கருணாரத்ன பங்கேற்கும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் இன்று (02) நடைபெறவுள்ளன.
பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிகள், இலங்கை நேரப்படி இன்று இரவு 11.15 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.
தருஷி 6 வது ஆரம்ப போட்டியில் பங்குபற்றவுள்ளதுடன் இந்த போட்டி இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த ஆண்டு பெரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டிக்குத் தகுதி பெற்ற வீராங்கனைகளில், தருஷியைத் தவிர மேலும் 3 வீராங்கனைகள் ஆசிய பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.